மறைந்த செல்லத்துரையின் இழப்பு அந்த குடுபத்திற்கு; 2009 பேட்ஜ் காவல் சொந்தகள் அனைவரும் ஒன்று இணைந்து வறுமையில் இருந்து அந்த குடும்பத்தை மீட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 9-10-2022 அன்று உடல்நல குறைவால் மறைந்த செல்லத்துரைக்கு 2009 பேட்ஜ் காவல்துறை நண்பர்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஒருகிணைந்து ரூ.24,85,450 வசூல் செய்து அவரது மனைவியின் பேரில் LIC-யில் ரூ.12,21,600/-டெபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் மாதம் தோறும் வீட்டு செலவுக்கு 5,750 ரூபாய் வட்டி கிடைக்கும் வகையில் வகைசெய்யப்பட்டுள்ளது.
அவரது திருமணமான மூத்த மகளின் பெயரில் ரூ.2,21,600/-பத்து வருடத்திற்கு டெபொசிட் செய்யப்பட்டுள்ளது. திருமணமாகாத அவரின் இளைய மகளின் பெயரில் ரூ.10,06,924/பத்தாண்டுகளுக்கு டெபொசிட் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த செல்லத்துரையின் இழப்பு அந்த குடுபத்திற்கு எந்த வகையிலும் இடுசெய்ய இயலாது என்றபோதிலும் அவரது குடும்பத்தை 2009 பேட்ஜ் காவல் சொந்தகள் அனைவரும் ஒன்று இணைந்து வறுமையில் இருந்து அந்த குடும்பத்தை மீட்டுள்ளனர்.