மல்லியத்தில் தென்னை நாற்றங்கால் நடவு பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் மல்லியம் அரசினர் தென்னை நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தென்னை நாற்றங்கால் நடவு பணியினை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் இலவச தென்னங்கன்றுகளின் உற்பத்தியை நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜே.சேகர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை ஜெயபால், வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண்மை அலுவலர் வளர்மதி, ஆகியோர் உடன் இருந்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மயிலாடுதுறைமயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்மயிலாடுதுறை மாவட்டம்மல்லியம் அரசினர் தென்னை நாற்றங்கால் மையம்மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதிமுக்கிய செய்திகள்