BREAKING NEWS

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

செய்தியாளர் க.கார்முகிலன்.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக,..

 

வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களை ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வெள்ளம் பாதிக்க பட்ட பகுதியாக அறிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

 

 

சீர்காழி தாலுக்காவில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடி தாலுக்காவில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 16 கோடியே 16 லட்சம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு அதனை செயல்முறை படுத்தும் விதமாக 24.11.22 வியாழக்கிழமையிலிருந்து 1000ரூபாய் நிவாரணம் இரண்டு தாலுக்காகளில் உள்ள கூட்டுறவு அங்காடியில் வழங்கபடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

 

 

 

2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியை பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா M. முருகன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா IAS தொடங்கி வைத்தனர்.

 

 

மற்றும் சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் பன்னிர்செல்வம், மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் ராஜ்குமார் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அப்துல் மாலிக் தொடங்கி வைத்தார். தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ் அப்பகுதி மக்களுக்கு 1000ரூ நிவாரணம் வழங்கி தொடங்கி வைத்தார்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )