மஸ்ஜிதேரஹ்மத் பள்ளிவாசல் திறப்பு விழா நூல் வெளியீட்டு விழா நூரே ஷரியத் பட்டம் வழங்கி பாராட்டு விழா.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரியாஸ் நகர் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி எதிரில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் திறப்பு விழா 65 ஆண்டு சமூக சேவையாளர்க்கு பட்டம் வழங்கி பாராட்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தஞ்சாவூர் மாவட்ட அரசு டவுன் காஜி மௌலானா மௌலவி அல்ஹாஜ்ட்டி.சையத் காதர் ஹுசைன் தலைமையில் நடைப்பெற்றது.
பாசில் ஸஹாரான்பூர் மௌலவி ஹாபிழ் காரி பி.எ.கமருதீன் அன்வாரி கிராஅத் ஓதி தொடங்கிவைத்தார். மௌலவி ஹாபிழ் எச்.ஆரிஃப்பில்லாஹி வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயினுல் ஆபீதீன் தொகுப்புரையாற்றியானர்.
தஞ்சை மாவட்ட ஜமாத் உலமா சபை தலைவர் அல்ஹாஜ் மௌனவி எம்.ஹாஜா முஹைதீன் மிஸ்பாஹி துவக்கவுரையாற்றினார். நீடூர் ஜாமியா மிஸ்பாஹில் ஹுதா முதல்வர் மௌலவி அல்ஹாஜ் அப்ஜனுல் உலமா அ.முகம்மது இஸ்மாயில் பாகில் பாகவி, திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவரும், திருச்சி ஜாமியா அன்வருல் உலும் அரபிக் கல்லூரிமௌலவி முப்தி எ.முகம்மது ரூஹுல் ஹக் ரஷாதி, தஞ்சாவூர் ஆற்றங்கரை ஜும்மா பள்ளிவாசல் இமாம் மௌலவி அல்ஹாபிழ் எம்.எ.அஸதுல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சரும், தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், மனிதநேய ஜனநாயக கட்சி நிறுவனரும், மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி,தஞ்சாவூர் மாநகர செயலாளரும், தஞ்சாவூர் மாமன்ற மேயருமான சண்.ராமநாதன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் டி.கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் எம். என் முகம்மது அலி நுரேஷரீ அத் பட்டத்தை வழங்கிட தஞ்சாவூர் மாவட்ட அரசு டவுன் காஜியும், காஜியார் புக் டிப்போ மற்றும் பதிப்பகம் நிறுவனர் மௌலானா மௌலவி ஹாஜி ட்டி, சையத் காதர் உசேன் பட்டம் பெற்று ஏற்புரையாற்றினார்.
திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவரும், திருச்சி ஜாமியா அன்வாருல் உலும் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி, முப்தி அ.முகம்மது ரூஹுல் ஹக் ராஷாதி பாராட்டுரையாற்றினார். தமிழர் தேசிய முன்னணி மாவட்ட துணைத்தலைவர் மொ.காஜாமொய்தீன் நூல் வெளியிட்டு விழாவிற்கு தலைமைவகித்து உரையாற்றினார்.
தஞ்சை மாநகர இஸ்லாமிய பேரவை தலைவர் கே.எம்.முகம்மது பாரூக் தஞ்சாவூர் மாவட்ட அரசு டவுன் காஜி வரலாறு நூலினை வெளியிட தஞ்சாவூர் மாவட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் எம். என். முகம்மது அலி பெற்றுக்கொண்டார். தஞ்சாவூர் ரெட்கிராஸ் பொருளாளர் எ.சேக் நாசர் நன்றியுரையாற்றினார். இம்முப்பெரும் விழாவினை விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அல்ஹாஜ் என்.ரியாஸ் சேக் தனது சொந்த இடத்தில் சொந்த செலவில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசலை கட்டி பொது உபயோகத்திற்காக வக்ஃப் செய்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.