மாட்டு வண்டி பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள் – சாலையோரம் நின்று கொண்டு இருந்த கூட்டத்திற்குள் புகுந்த மாட்டு வண்டி 4 பேர் லேசான காயம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வைப்பாரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தன வைப்பார்-தூத்துக்குடி சாலையில்
பெரிய மாட்டு வண்டி சிறிய மாட்டு வண்டி பூஞ்சிட்டு என்று மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
பெரிய மாட்டு வண்டியில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன 10 கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது இப்போட்டியில் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மாட்டுவண்டி முதல் பரிசையும் 2-வது பரிசை அவானியாபுரம் மோகன்சாமி குமார் 3-வது பரிசை சண்முகாபுரம் விஜயகுமார் மாட்டு வண்டியும் பரிசையும் தட்டி சென்றது.
இரண்டாவது போட்டியாக சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது 21, ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன ஆறு கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இப்போட்டியில் ஜக்கம்மாள்புரம் பரமசிவம் என்பவரது மாட்டுவண்டி முதல் பரிசையும் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த துர்காம்பிகை என்பவரது மாட்டுவண்டி 2-வது பரிசையும் சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மெடிக்கல் 3 பரிசையும் தட்டிச் சென்றது.
மூன்றாவது போட்டியாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் 31,ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை நெடுகிலும் கைதட்டி மாட்டு வண்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது திடீரென கூட்டத்திற்குள் உள்ள புகுந்த மாட்டு வண்டி அங்கிருந்த பார்வையாளர்கள் மீது மோதி நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.