BREAKING NEWS

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம் வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் வேலூர் சரக டிஐஜி பேச்சு.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம் வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் வேலூர் சரக டிஐஜி பேச்சு.

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசினர் கல்லூரியில் வெற்றித் தமிழா என்ற தலைப்பில் மாணவர்களுக்கான போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

 

இந்த முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் அ.மலர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தொல் பொருட்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல இயக்குனர் ராமசெல்வம் திருவனந்தபுரம் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின்
கூடுதல் தலைமை இயக்குனர் பழனிச்சாமி, வேலூர் சரத காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி அகில இந்திய குடிமை பணி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் டி. தங்கராஜன் உள்பட பலர் பங்கேற்று போட்டி தேர்வுகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விளக்கி கூறினார்கள்.

 

 

முகாமில் பேசிய வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

 

 

தான் நினைக்கும் துறையில் வெற்றி வெற்றி பெறலாம் அதற்கு முக்கிய காரணம் ஒரு லட்சியம் இருக்க வேண்டும் எந்த ஒரு செயலிலும் லட்சித்யத்துடன் ஈடுபட்டால் வெற்றி பெறுவது நிச்சயம் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த கனவு உழைப்பு ஆகியவை மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.

 

மாணவர்களுக்கு லட்சியம் இருக்க வேண்டும் எந்த ஒரு செயலையும் லட்சியத்துடன் செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். சமுதாயத்தில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அவற்றை பெறுவதற்கு அதற்கான விழிப்புணர்வு மாணவர்களிடத்தில் இருக்க வேண்டும் என பேசினார்.

CATEGORIES
TAGS