மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சரக்கல்விளை என்ற இடத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு முகாமில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு அடிமையாதல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பெற்றதுடன் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தெரிந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திருமதி.ரெமிலா பால்சி மற்றும் பிற ஆசிரியர்களும் கலந்துக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரு.விமல் ராஜேஷ் குமார், போதை ஒழிப்பு ஆலோசகர், எ.எம்.எல் நரம்பியல் மனநல மருத்துவமனை, பால்பண்ணை.
இதை தொகுத்து வழங்கியவர் எ.எம்.எல் நரம்பியல் மனநல மருத்துவமனை, (இடம் பால்பண்ணை), மற்றும் திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவி சே.ஆஷிகா.
இந்நிகழ்ச்சியில் 45-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.