BREAKING NEWS

மானாமதுரையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை.

மானாமதுரையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் உள்ள சாலைகளில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடந்தவண்ணம் உள்ளன.

 

இதனை கருத்தில் கொண்டு மானாமதுரை உதவி கோட்ட பொறியாளர் திருமதி பாக்யலட்சுமி மற்றும் உதவிப் பொறியாளர் ராமநாதன் ஆகியோர் சாலை ஓரங்களில் உள்ள தடுப்பான்களில் கருப்பு வெள்ளை வண்ணங்கள் பூச உத்தரவிட்டனர்.

 

உடனே தடுப்பானகளில் கருப்பு வெள்ளை வண்ணம் பூசப்படும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

 

மக்களின் பாதுகாப்பிற்காக துரிதமாக செயல்பட்ட மானாமதுரை உட்கோட்ட பொறியாளர் திருமதி பாக்யலட்சுமிக்கும் உதவி பொறியாளர் ராமநாதன் அவர்களுக்கும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )