மானாமதுரையில் நாய்களுக்கு வெறிநோய் விழிப்புணர்வு தடுப்புசி முகாம்.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் தடுப்பு ஊசி விழிப்புணர்வு முகாம் நகராட்சி எதிரில் சனிக்கிழமை அன்று நடைபெற்று.
இம்முகாமினை நகராட்சி சேர்மன் மாரியப்பன் கென்னடி அவர்கள் தலைமையில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை அவர்கள் துவக்கி வைத்தார்.
நகராட்சி துணைத்தலைவர் தலைவர் பாலசுந்தரம், நகர செயலாளர் பொண்ணுசாமி, சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.நாகநாதன், உதவி இயக்குநர் மரு.சரவணன்,
மானாமதுரை வட்டார கால்நடை துறை மருத்துவர்கள் மரு. விக்னேஷ், மரு.ராமன், மரு. இராஜ்குமார், மரு.கவியராசு, மரு.அனுசியா, மரு.உமாபாரதி, மற்றும் கால்நடைதுறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 100 மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு வெறிநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.