மானாமதுரையில் புத்தாண்டில் புத்தக கண்காட்சி.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் அருகே புத்தக கண்காட்சி ஏராளமான புத்தகங்களோடு நடைபெற்றது.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பொது அறிவு புத்தகங்கள், தமிழ் கனல் எழுதிய கவிதை திறன் புத்தகம், பெண் ஏன் அடிமையானால், மலைபாடும் மண்ராகம் பாடல்கள், நமக்கான குடும்பம் ,அரசியல் எனக்கு பிடிக்கும், நவகவி 1000 ,செல்வ கதிரவனின் அம்மா ,இன்னும் ஏராளமான புத்தகங்கள் கொண்ட புத்தக கண்காட்சி மானாமதுரையில் நடைபெற்றது.
புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தமிழ்கனலின் கவிதை திறன் புத்தகத்தை இரண்டு மாணவர்கள் ஆய்வுக்கு எடுத்து படித்து வருவதாக தமிழ்க்கனல் தெரிவித்தார். புத்தக கண்காட்சியில் புத்தக கண்காட்சி விற்பனையை மிளகனுர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் தொடங்கி வைக்க மானாமதுரை பொறியாளர் கண்ணன் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் தங்க முனியாண்டி ,மாவட்ட பொருளாளர் பாலமுருகன் ,கிளை தலைவர் தாஸ் ,கிளை செயலாளர் ரசீந்தர், கிளை பொருளாளர் சபரி, எழுத்தாளர் தமிழ் கனல் ,சிறுகதைஎழுத்தாளர் செல்வகதிரவன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட முன்னாள் செயலாளர் சீமைச்சாமி முருகானந்த ,ஆண்டி ,ராஜாராமன் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடக்கமாக பார்வையற்றோர் வருகை புரிந்து அவர்கள் பாடல்களை பாடினார்கள். அந்த இசை நிகழ்வில் தமிழ் கனல் முற்போக்கு எழுத்தாளர்கள் குறித்து அவர் பாடல் பாடினார்.