மானாமதுரை கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக பேரணி.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக கீழநெட்டூர் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
குழந்தைகள் தினமான நவம்பர் 14 லை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சகமாணவர்களைப் போல் மதித்து நடப்போம் என்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் சிறப்பு கவனம் தேவை படும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும்,..
அவர்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் சிறப்பு மாணவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல் கவனித்து கொள்வோம் என்றும் உறுதிமொழி எடுத்து கீழநெட்டூர் கிராமம் முழுவதம் பேரணியாக மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர்(பொறுப்பு) மு.மல்லிகா தலைமையில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் எஸ்எம்ஸி பிரதிநிதி ம.அழகியமீனாள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.