BREAKING NEWS

மானாமதுரை சட்டமன்ற தொகுதி மக்கள் பணியில் தீவிரம் காட்டும் பாஜக.

மானாமதுரை சட்டமன்ற தொகுதி மக்கள் பணியில் தீவிரம் காட்டும் பாஜக.

செய்தியாளர் வி.ராஜா.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் விரிவாக்கம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிசெய்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் வழிபாட்டு தளங்கள் மற்றும் கடைகள் அகற்றுவதை ரயில்வே துறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

 

 

இதனால் அப்பகுதி உள்ள பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். பாஜக கட்சியினர் இதனை தடுக்கும் விதமாக இரயில் அருகே உள்ள வழிபாட்டு தளங்களை அகற்ற கூடாது என வலியுறுத்தி பாஜக வினர் வருகின்றனர்.           

 

பாஜக கட்சி நிர்வாகிகள் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.மேப்பல் சக்தியிடம் அவர்களிடம் தெரிவித்தனர். இதனை கேட்டறிந்து மாவட்ட தலைவர் தலைமையில் உடனே நடவடிக்கை எடுக்கும் விதமாக மானாமதுரை இரயில்வேக்கு சொந்தமான விரிவாக்கம் செய்யபடும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

 

 

இப்பகுதியில் உள்ள இந்துகள், இஸ்லாமியர்கள், கிருதுஸ்தவர்கள் உள்ள வழிபாட்டு தளங்களை பாஜக நிர்வாகிகள் பார்வையிட்டனர். அப்பகுதியில் உள்ள மதங்களை சார்ந்த சமூகத்தினர் குறை கேட்டறிந்தார். 

 

இதனால் இஸ்லாமிய சமூகத்தினர் பாஜக நிர்வாகிகளிடம் கூறுகையில் இந்த நடவடிக்கையானது முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் கலங்கமாக கூட்டமைப்பு பார்க்கிறது என்று தெரிவித்தனர். இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கும் முரணானதாகும் தெரிவிக்கப்பட்டது. 

 

இஸ்லாமிய தொழுகை பள்ளி வாசலில் பாா்வையிட்டு அவா்களுக்கு இந்துகள் சார்ந்த சமூகத்தினர் மற்றும் கிருஸ்துவர்கள் சார்ந்த சமூகத்தினற்க்கு எப்பொழுதும் பாஜக கட்சி என்றும் துணை இருப்போம் என்று உறுதியளித்தனர். 

 

 

இப்பகுதியில் உள்ள பாஜக நிா்வாகிகள்

மத நல்லினக்கத்தோடு செயல்படும் ஒரே கட்சி பாஜக கட்சி செயல்படும் என தெரிவித்தனர். இதனால் அச்சத்தில் இருந்து மக்கள் பாஜகவினர் செயல்பாடுகளை கண்டு வியந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

 

இந்த ஆய்வில் மானாமதுரை சட்டமன்ற பொறுப்பாளார் சுரேஷ், ரயில்வே கமிட்டி நிர்வாகி பாலாகணபதி, நகர்மன்ற உறுப்பினர் நமகோடி, மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன், கிழக்கு ஒன்றிய தலைவர் சுப ரவி, நகர செயலாளர் பூமணத்தமிழன், மற்றம் ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் பாஜக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )