மானாமதுரை வாரசந்தை கடைகளில் வியாபாரிகள் மிரட்டி அதிக வசூல் வேட்டை ரூபாய் 35,00,000 லட்சம் மோசடி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் புதிதாக 2.50 கேடி செலவில் வாரசந்தை கடைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்ட செயல்பாட்டுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாரசந்தை கடந்த மாதம் 20 மற்றும் 27ம் தேதி வாரசந்தை நடைபெற்றது.
அதற்கு முன்னர் நகராட்சி ஆணையர் மூலமாக சந்தையில் கட்டிட கடைகள் 259 மற்றும் தரைக்ககடை வியாபாரிகளை மிரட்டி முறையான ரசீது தரமால் மற்றும் டோக்கன் அட்டை முலம் கடைகளுக்கு அதிகமாக வசூல் வேட்டை ரூபாய் 10,000 வீதம் தரைக்கடைக்கு ரூபாய் 10.000, 8,000, 5,000, 3,500, அதிமாக வசூல் செய்தனர். மானாமதுரை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கண்டித்து கடந்த மாதம் 23.09.2022 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டனம் தெரிவித்தும் பண மோசடி சம்மந்தமாக மானாமதுரை நகர் முழுவதும் நடவடிக்கை எடுக்க கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
உடனே நகராட்சி ஆணையர் உத்தரவுபடி நகராட்சி ஊழியர்கள் முலம் விளம்பரம் செய்த சுவரொட்டிகள் கிழித்து அப்புறப்படுத்தினர்.
இதனை கண்டித்து நகராட்சி ஆணையர் மீதும் சுவரொட்டிகள் கிழித்து ஊழியர்கள் மீதும் மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இது சம்பந்தமாக நகர்மன்ற உறுப்பினர் நமகோடி (எ) முனியசாமி நகராட்சி ஆணையரிடம் முறையிட்டு வாரசந்தையில் முறையான ரசீது கொடுக்கமால் மோசடி செய்யபட்ட நிதி ரூபாய் 35,00,000 லட்சம் எங்கே?
என கேட்ட போது சரியான பதில் அளிக்கவில்லை பதில் சொல்ல மறுக்கிறார் என குற்றச்சாட்டு இதை உடனடியாக நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்..