மாபெரும் இலவச மருத்துவ முகாம் தேரிழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூரில் EAI- சங்கம் & ஜமா அத்தார்கள் மற்றும் தீபம் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இதில் தேரிழுந்தூர் ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் இந்த முகாமிற்கு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தனர் தொடர்ந்து இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பெருமாள்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பாலு,
தேரிழந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி இராஜாஜி,மேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜிடி.மோகன்ராஜ், தொழுதாலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.இராமலிங்கம்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் எலும்பு மருத்துவம்,எலும்பு தேய்மானம்,மூட்டு வலி,முழங்கால் வலி,பல் மருத்துவம், பல் சொத்தை,பற் காரை,பல் வலி,பொது மருத்துவம்,சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,தைராய்டு கோளாறுகள், ஊட்டச்சத்து குறைபாடு,போன்ற அனைத்து விதமான மருத்துவமும் பார்க்கப்பட்டது.
இதில் திரளாக பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமிற்கு வருகைதந்து தங்களது உடலை மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொண்டு ஆலோசனை பெற்று சென்றனர் இந்த முகாமை EAI – சங்கத்தினர் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.