மாப்படுகையில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா எஸ் பி என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார்.
![மாப்படுகையில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா எஸ் பி என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார். மாப்படுகையில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா எஸ் பி என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-28-at-6.49.55-PM.jpeg)
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா கலந்து கொண்டு சிறுவர் சிறுமியர் மன்றத்தை திறந்து வைத்தார்.
இதில் சிறுவர் சிறுமியர் உடற்பயிற்சி பெறுவதற்கும் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 50-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியருக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை அபயாம்பாள்புரம் குடியிருப்பு நல சங்கபொருப்பாளர்கள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ராஜ்குமார், ரவிச்சந்திரன், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் காவல் துறையினர், ஊராட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.