மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கிளாமங்கலத்தில் நடந்த தீண்டாமை கொடுமைக்கு நி வரயாயம் கேட்டு வருகிற 7-ம் தேதி ஒரத்தநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தீண்டாமை கொடுமை நிகழ்ந்த கிளாமங்கலம் கிராமத்திற்கு சென்று நேரடியாக அந்த மக்களை சந்தித்து பேசியதாக தெரிவித்த அவர் தீண்டாமைக்கு எதிராக போராடுகிற மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்,
அவர்களுக்கு நியாயம் கேட்டும் வருகிற 7 ம் தேதி ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர் ஜாதிய வன்கொடுமைகளை தூண்டி விடுகிற சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,
மாநில மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழுக்களை கூட்ட வேண்டும் அதில் எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறை ப்படுத்த வேண்டும் இதற்காக இருக்கிற தீண்டாமை ஒழிப்பு பிரிவு காவல்துறை மற்றும் வட்டாட்சியர் நிர்வாக அமைப்பினர் கள ஆய்வு செய்து இது போன்ற தீண்டாமை கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.