BREAKING NEWS

மார்த்தாண்டம் அருகில் இலவுவிளை, மார் எப்ரேம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணப்பண்டிகை கொண்டாட்டம்

மார்த்தாண்டம் அருகில் இலவுவிளை, மார் எப்ரேம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணப்பண்டிகை கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை, மார்த்தாண்டம் அருகில் இலவுவிளை, மார் எப்ரேம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் நடைபெற்ற ஓணப்பண்டிகை கொண்டாட்டம்

குழித்துறை, இலவுவிளை மார் எப் ரேம் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று ஓணம் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாணவர்கள் மாவேலி வேடமணிந்து முத்துக்குடை பிடித்து செல்ல

கேரள கலாச்சார உடைகளுடன் ஏராளமானோர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.

மேலும் கல்லூரி வளாகத்தில் உறியடி, அத்தப்பூ, திருவாதிரை, கதகளிபோட்டிகள் நடத்தப்பட்டன.

இலவுவிளை சந்திப்பில் இருந்து கல்லூரி வரை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு கல்லூரி தாளாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். நிதி காப்பாளர் கெவின், கல்லூரி

முதல்வர் லெனின் பிரட், ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓணப்பண்டிகை நிகழ்ச்சியில்

சிறப்பு விருந்தினர்களாக

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்,

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் MLA, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் ரூபி மனோகரன் MLA, குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசைதம்பி,

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர்,

R.லாரன்ஸ் திங்கள்நகர் பேரூராட்சி தலைவர்

R.சுமன், மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவ,மாணவியர்கள்

கலந்து கொண்டார்கள்.

CATEGORIES
TAGS