மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது,. இதனையடுத்து தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் செயல்படும் காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான மாற்றுத்திறனாளிகள் அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சாமிநாதன் மற்றும் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மதிய உணவினை வழங்கினர் பின்னர் அவர்களுடன் உட்கார்ந்து பாகுபாடு பார்க்காமல் சமமாக உட்கார்ந்து உணவு உண்டு மகிழ்ந்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்