BREAKING NEWS

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தகவல்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷ்ரவன் குமார், தகவல்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள், சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்கள்.

 

அதன்படி, நடப்பாண்டிலும் 15.08.2023 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.25,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்காக நடைபெறும் மாநாட்டில் வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும்,

 

மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

 

மேலும், இவ்விருதுகளை பெற விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 25.06.2023 க்குள் விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி, தொலைபேசி எண் 04151-222212 என்ற முகவரியில் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், அவர்கள் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS