மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் மனு அளிக்க வந்த இரண்டு தூய்மை பணியாளர்கள் தீக்குளிக்க முயற்சி.
கடலூர் மாவட்டம் கோ.கொத்தனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி முகாமில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அருகில் உள்ள வரம்பனூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் ராதிகா, மகேஸ்வரி பல ஆண்டுகள் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய இருவரையும் எவ்வித காரணமும் இல்லாமல் வேண்டுமென்றே வரம்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் பணிநீக்கம் செய்துள்ளதாகவும்,
அது குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முயன்றனர்.
இருவரும் மனு அளிக்கவிடாமல் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி தடுப்பதாகவும் மேலும் தனக்கு பணி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பணி நீக்கம் செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி விரக்தி அடைந்த இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி மாவட்ட ஆட்சியரின் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.
இதனைப் பார்த்த அங்கு இருந்த போலீசார் இருவர் மீதும் தண்ணீர் ஊற்றி மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர் மாவட்ட ஆட்சிகளின் அருகிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்றம் அதனை கண்டு கொள்ளாத நல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் செயலை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.