BREAKING NEWS

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் குத்தாலம் கொள்ளிடம் சீர்காழி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.

 

குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சி மன்ற தலைவர்கள், கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சி மன்ற தலைவர்கள், சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சி மன்ற தலைவர்கள், என 130 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கிராம ஊராட்சிகளுக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தி வருகிறார். மகாத்மா காந்தியடிகள் இந்தியாவின் முதுகெலும்பு கிராமம் என்று சொல்லி இருக்கிறார். நமது மயிலாடுதுறை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும். விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை தெரியப்படுத்த வேண்டும் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொது மக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.

 

தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் இன்னும் வரக்கூடிய ஒரு வருட காலத்திலும் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி தருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தன்னிறைவு பெற்ற மாவட்டம் உருவாக்கப்படும். குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி மின்சாரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அடிப்படை நிறைவேற்றி தர வேண்டும். கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்.

 

குப்பைகள் இல்லா கிராமத்தை உருவாக்க வேண்டும் நமது மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் 99 கோடி செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஊராட்சி மன்ற தலைவர்கள் பணிகளை தரமாக செய்வதை ஆய்வு செய்ய வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் நேர்மையாக செயல்பட வேண்டும். நம்பிக்கை பாத்திரமாக செயல்பட வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை கண்காணிக்க வேண்டும்.

 

பின்னர் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் தங்களுடைய கிராம ஊராட்சியிலுள்ள பொதுவான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுருத்தியதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுடைய பொதுவான கோரிக்கைகளை முன் வைத்தனர்.

 

ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் குடிநீர் வசதி, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, சாலை வசதி, சமுதாயக் கூடம், பழுதடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகள் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தார்.

 

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, கோவிந்தராஜ். (தணிக்கை) சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS