மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையின் அணைப்பில் பசுமையும், குளிர்ந்த காற்றையும், பல அருவிகளையும் கொண்டு நல்ல வளமாகவும், சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் “பசுமைத் தமிழகம் – Green Tamilnadu Mission” திட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓய்வு பெற்ற காவல் துறையினர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தங்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது குறித்து தங்களின் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த், சைபர் கிரைம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் .ஜூலியஸ் சீசர், தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் .தமிழினியன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.