BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக மணல் கடத்தல்?

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டம் கணியூரில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழியில் புத்துக் கோவில் என்ற இடத்தில் இரவு, பகலாக ட்ராக்டர்களால் மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆற்று மணல் லோடு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் விற்கும் நிலையில் இந்த கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. வருவாய்த் துறை அதிகாரிகள் இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )