மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூர் பொம்மை கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கு திறப்பு.

மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒரு ரயில் நிலையம், ஒரு தயாரிப்பு பொருள் என்ற திட்டத்தினை அறிவித்தது, இந்தத் திட்டத்தில் உள்ளூர் கைவினைப் பொருட்கள், கலை பொருட்கள் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அதற்கான கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 6 ரயில்வே கோட்டங்களில் முதற்கட்டமாக கோட்டத்துக்கு ஒன்று வீதம் 6 ரயில்வே கோட்டங்களில் கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறக்கப்பட்டது. அதில் திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த திட்டத்தில் தஞ்சாவூர் ரயில்வே நிலையம் தேர்வு செய்யப்பட்டது.


அதன்படி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை விற்பனை அரங்கு அமைக்கப்பட்டது.



இந்த அரங்கில் தலையாட்டி பொம்மை, டான்சிங் பொம்மை ஆகியவை விற்பனைக்காக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இதனை ரயில்வே நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் பார்வையிட்டு வாங்கி சென்றனர். இதன் மூலம் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் உள்ளுர் கலைப் பொருட்களை நாடறிய செய்ய முடியும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
