BREAKING NEWS

மின்சார சிக்கனத்தை குறைப்பதற்கான சாதனத்தை ஏ1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி உள்ளார் 10ம் வகுப்பு மாணவர்.

மின்சார சிக்கனத்தை குறைப்பதற்கான சாதனத்தை ஏ1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி உள்ளார் 10ம் வகுப்பு மாணவர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகர் அருகே திருமகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக சமூகத்தில் பயன்பெறும் வகையில் ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அதனை அடுத்து இதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் சஞ்சய் ராஜ், மின்சார சிக்கனத்தை குறைப்பதற்கான சாதனத்தை செயற்கை நுண்ணறிவு ( AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். இதன் மூலம் வீடுகள் மட்டுமல்லாமல் பள்ளிகள் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள், மனிதர்கள் அந்த அறையை விட்டு வெளியே செல்வதை சென்சார் மூலம் உணர்ந்து தானாகவே அணையும்.

மின்சாரம் பயன்படுத்தும் மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடம் இருக்கும் நிலையில் இந்த சாதனத்திற்கு இன்னும் மெருகூட்டி பெரிய அளவில் செயல்படும்போது இதன் மூலம் அந்த நிலை மாறும் என மாணவர் கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS