மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது விபத்தில் சிக்காமல் காபாற்றிய ரயில்வே பாதுகாப்புபடை காவலர். வைரலாகும் சிசிடிவி காட்சி.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று மாலை செங்கல்பட்டு ரயில்நிலையம் இரண்டாவது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் புறப்படும் போதே ஏற முயன்ற பெண் நிலை தடுமாறி நடைமேடையில் விழுந்தார். அருகில் இருந்த ரயில்வே போலீசார் உடனே அந்த பெண் (விபத்தில்) தண்டவாளத்தில் விழாமல் இருக்க பெண்ணின் கையை பிடித்து இழுத்து காபாற்றினார்.
ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ரயிலில் இருந்து கீழே விழுந்த போது ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பெண்ணை காபாற்றிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்போதும் பரபரப்பாக காணப்படும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது அருகில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் காபாற்றிய சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.