மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை இயந்திரம் மூலம் வரும் திட்டம் துவக்கம்.
போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் இயந்திரம் மூலமாக பத்து ரூபாய் நாணயம் அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை வரும் திட்டத்தை நகர மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் துவக்கி வைத்தார்.
பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாகவும் தூய்மையான நகரம் மற்றும் மாசுபாடுற்ற சூழல் உருவாகும் விதமாக மஞ்சப்பை மூலமாக மண்ணையும் மக்களையும் காக்கும் திட்டம் என தெரிவித்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை நகராட்சி துவக்கி வைத்தார்.
இதில் நகர மன்ற ஆணையாளர் செல்வராணி நகர்மன்ற துணைத்தலைவி கிருஷ்ணவேணி மற்றும் நகர மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இயந்திரத்தில் பத்து ரூபாய் ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பை பொதுமக்களுக்கு வழங்கினர். இவ்விழாவில் நகராட்சி ஊழியர்கள் ஏராளமான பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.