முசிறி அருகே சொத்து தகராறில் மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகள்.
திருச்சி; முசிறி அருகே உள்ள சிட்டிலரை மேலமேடு வடக்கு கொட்டம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (வயது 85) இவருக்கு இரு மனைவிகள் இருவரில் இரண்டாம் மனைவி இறந்துவிட்டார், முதல் மனைவி பெரியக்காள் உயிருடன் உள்ளார்.
இதில் முதல் மனைவி மகன் உழவன் என்கிற உலகநாதன் மற்றும் இரண்டாம் மனைவி கொழுந்தாய்க்கு கணேசன் என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில் மாணிக்கம் தனது சொத்துக்களை இரு மனைவி மகன்களுக்கும் 2015 ம் ஆண்டு உயில் எழுதி வைத்திருந்தவர் 2017 ம் ஆண்டு உயிலை ரத்து செய்துள்ளதாகவும். 2018 ஆம் ஆண்டு கணேசன் தனக்கு உரிய பாகத்திற்கு பட்டா பெற்று உரிய நிலத்தில் விவசாயம் செய்து வந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனையடுத்து மருதம்பாள் உரிய நிலத்தினை விவசாயம் செய்து வந்ததில் கணேசன் மனைவி மருதாம்பாள் மற்றும் மாணிக்கத்துக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த மருதாம்பாள், மாணிக்கத்தை கொடுவாளால் வெட்டியதாகவும். இதில் பலத்த காயமடைந்த மாணிக்கம் நிகழ்விடத்தில் உயிரிழந்துள்ளார். இத்தகவல் அறிந்த முசிறி போலீசார் மருதம்பாளை தேடி வருகின்றனர்.