BREAKING NEWS

முடிச்சூர் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து.. நான்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

முடிச்சூர் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து.. நான்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில் சோமங்கலம் – தாம்பரம் செல்லும் சாலை ராகவன் என்பவருக்கு சொந்தமான தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த கிடங்க அமைந்துள்ளது.

 

இங்கு ஏராளமான பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய கழிவு பொருட்கள் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று நாலு மணி அளவில் குடோனின் ஒரு பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு காற்று திசையின் வேகம் காரணமாக வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

 

 

திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டதை கண்ட ஊழியர்கள் விரைவாக தீயணைப்பு துறை தகவல் தெரிவித்தது ஊழியர்கள் தம்மால் முடிந்த அளவிற்கு தீயை மேலும் பரவாமல் தடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

 

தீ விபத்து நடைபெற்ற இடத்தில் தீயும் வேகம் மற்றும் காற்று திசை வேகம் காரணமாக அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் உடனடியாக அருகில் இருந்த பகுதிகளில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீ விபத்து பகுதிக்கு வர வைக்கப்பட்டது

 

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தீ அவ்வப்போது கொழுந்து விட்டு எரிந்து வருவதால் தற்பொழுது வரை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

 

மேலும் சோமங்கலம் தாம்பரம் , முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் , ஒரகடம் உள்ளிட்ட பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்களும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 

இந்த தனியார் பிளாஸ்டிக் குடோன் தொழிற்சாலை அருகில் இருக்கக்கூடிய தொழிற்சாலையில் இருந்து இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கிடங்காக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

 

கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயானது எரிந்து கொண்டு வருவதால் கரும்புகை மட்டும் ஏற்பட்டுள்ளது இதனால் அருகில் இருக்கக்கூடிய குடியிருப்பு வாசிகளை அங்கிருந்து அப்புறபடுத்தி வருகின்றனர்.

 

 

கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு இது போன்ற திறந்தவெளியில் சேமிக்கப்படுவதும், போதிய தீத்தடுப்பு சாதனங்கள் இல்லாததும், பல இரும்பு பொருட்களை கட் செய்து பிரிக்க எந்தவித அனுமதி இன்றி சிலிண்டர் பயன்படுத்துவதும், பாதுகாப்பு உறுதி செய்யாமல் செய்வது போன்றவை இதுபோன்ற இடங்களில் தீ விபத்துக்கு அதிக காரணங்களாக உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த தீ விபத்தில் பொருட்கள் சேதம் மட்டுமே ஏற்பட்டதும் எந்த ஊழியர்களுக்கும் சிறு காயங்களும் இல்லாதது ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளிக்கிறது.

CATEGORIES
TAGS