முட்டை விலை உயர்வால் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்
கடலூர்: வேப்பூர் அடுத்த பூலாம்பாடி, நாரையூர், சிறுபாக்கம், சிறுகரும்பலூர், எஸ். புதூர், குமாரை, பாளையம் உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் பட்டு வளர்ச்சி துறை மூலமாக மானியம் பெற்று கொட்டகை அமைத்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முட்டை விலை உயர்வால் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை சேலம் தர்மபுரி ராம்நெறி உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பட்டுக்கூடு அங்காடி மையங்களில் விற்பனை செய்வது வழக்கம் இந்நிலையில் கடந்த மாதம் எந்த முன் அறிவிப்பும் இன்றி மத்திய மாநில அரசுகள் முட்டை விலை உயர்த்தப்பட்டதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர்.
இதனால் இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையங்களில் முட்டை ஒன்றிற்கு 34 ரூபாய் கொடுத்து வாங்கிய நிலையில் தற்போது 40 ரூபாய்க்கு கொடுப்பதாகவும் விவசாயிகள் வேதனை அடைந்த வருகின்றனர் ஏற்கனவே விவசாயிகளுக்கு கூடு விற்பனை செய்த தொகை வருவது தாமதமாகவும் பேட்ஜ் பெயிலியரின் போது இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்த நிலையில் தற்போது முட்டை விலை உயர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
முட்டை விலை உயர்வை மட்டும் உயர்த்தி விட்டு பட்டுக்கு குறைந்த விலைக்கு விவசாயி இடம் வாங்குவது எந்த விதத்தில் நியாயம் இன்று விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
உடனடியாக, தமிழக அரசு பட்டு வளர்ச்சித் துறையில் அதிகாரிகள் ஆய்வு செய்து முட்டை விலை உயர்வை கட்டுப்படுத்தி விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக் கூடுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து பட்டுப்புழு வளர்ப்பில் உள்ள சிரமங்களை சரி செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.