முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தஞ்சையில் தொடங்கி வைத்தார்
தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார் தஞ்சை மாநகராட்சி ஆணையர் மாணவர்களோடு அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.
தஞ்சை கூட்டுறவு காலணியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழக அரசு கொரடா கோவி.செழியன் மாணவ, மாணவிகளுக்கு கேசரி. வடை, பொங்கல். சாம்பாருடன் சுவையான சிற்றுண்டி பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளோடு ஒன்றாக அமர்ந்து காலை சிற்றுண்டி ருசித்தார். மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆணையருக்கு உணவு பரிமாறினார்.
தஞ்சாவூர் கும்பகோணம் மாநகராட்சிகளில் 21 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது 1442 மாணவ மாணவிகள் காலை சிற்றுண்டி சாப்பிட்டு பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.