முதலாம் ஆண்டு கல்வி கடன் கொடுக்காமல் மேல் ஆலத்தூர் இந்தியன் வங்கி மேலாளர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அம்பேத்கர் நகர் ராணுவ வீரர் சாலையில் வசிக்கும் முருகேசன் அவருடைய மகன் அஸ்வின் ஒரு தனியார் கல்லூரியில் பிபிடி பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வருகிறான்.
முருகேசன் அவர்கள் கூலி வேலை செய்து தன் பிள்ளையை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் தற்போது அவர் மேல் ஆலத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் கல்வி கடனை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்தியன் வங்கி மேலாளர் முருகேசனை அழைத்து கல்வி கடன் கொடுப்பதாக வாக்கு கொடுத்து அனைத்து ஆவணங்களையும் வாங்கிக் கொண்டு நான் உங்களை அழைக்கும் போது நீங்கள் வரலாம் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். திடீரென்று கல்வி கடன் கொடுப்பதில்லை மறுத்துவிட்டார்.
இதைக் குறித்து என் மகன் அஸ்வின் கடந்த 9.1.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.மீண்டும் வங்கி மேலாளர் என்னையும் என் மனைவி என் பிள்ளைகள் மூவரையும் அழைத்து நான்கு வருடங்களுக்கு கல்வி கடன் கொடுப்பதாக உறுதி அளித்து முதலாம் ஆண்டு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும்,
இரண்டாம் ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் நான்காம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் கொடுப்பதாக உறுதி அளித்து ஆனால் கடந்த நான்கு மாதங்கள் ஆகியும் என் மகனுக்கு கல்வி கடன் கொடுக்கவில்லை மறுபடியும் நான் மேலாளத்தூர் இந்தியன் வங்கி மேலாளரை அணுகினேன். அதற்கு வங்கி மேலாளர் முதலாம் ஆண்டு கல்வி கடன் கொடுப்பதில்லை, மூன்று ஆண்டுக்கு கல்வி கடன் கொடுப்பதாக கூறினார்.
ஆனால் முதலாம் ஆண்டு கல்விக் கடன் கட்டுவதற்கு இன்னும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியதாயிருக்கிறது. அதனால் எங்களுக்கு முதலாம் ஆண்டும் கல்வி கடன் வழங்க வேண்டும் என்று வங்கி மேலாளரை கேட்டு அணுகினோம்.
ஆனால் வங்கி மேலாளர் அவர்கள் கண்டிப்புடன் உங்களுக்கு கல்வி கடன் கொடுக்க முடியாது என்று அவமதித்து என்னை அனுப்பி விட்டார். ஆகவே இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு கொடுத்து என் மகனுக்கு நான்கு ஆண்டு காலமும் கல்வி கடன் வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளேன்.
மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து நான்கு ஆண்டு காலத்திற்கு கல்வி கடன் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் இந்தியன் வங்கி மேலாளர் என் மகனுக்கு கல்வி கடன் கொடுக்கவில்லை என்று சொன்னால் என்னுடைய மகனுடைய படிப்பு கேள்விக்குறியாகி விடும் என்று தந்தை வேதனை உடன் பகிர்ந்து கொண்டார்.