முதுகுளத்தூர் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் குறு வட்டார அளவிலான தடகள விளையாட்டு போட்டி கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை விளங்குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செய்தனர். போட்டியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, டிஎஸ்பி சின்னகண்ணு தலைமை வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் , டிஐபிஇ வசந்தி, தாளாளர் சந்திரசேகர், தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ், பள்ளி முதல்வர் அட்லின் லீமா முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தர் அனைவரையும் வரவேற்றார்.
முதுகுளத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் 14 ,17 ,19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் தனித்தனியாக போட்டியில் நடத்தப்பட்டது ,வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
போட்டியின் உடற்கல்வி ஆசிரியர்களாக வேதமலை ,முகமது உசேன், கமல் பாட்சா, அடைக்கலம், பிரபு, சூசை, அருள் ,பிரபாகர், சரவணன், முனியசாமி, சிவக்குமார் ,காமராஜ், ஜேக்கப், அசோக், ஜெர்மன் ஆஷா, மகேஸ்வரி, கோகிலா, அபுகுரைரா ,அன்சாரி, வடிவேல் முருகன், ராஜசேகர், மாரி, வலம்புரி ராஜ் ஆகியோர் பணியாற்றினர்.