முதுகுளத்தூர், 3198 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.

முதுகுளத்தூர், செல்வநாயகபுரத்தில் 3198 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருந்து வருகிறது என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் தகவல்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு துறைக்கும் தனிக்கவனம் எடுத்து திட்டங்கள் செயல்படுத்துவதன் விளைவாக இன்று தமிழகம் தொழில்துறையில் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
காரணம் ஒவ்வொரு நாளும் உழைப்பு, சிந்தனை இதுவே மாண்புமிகு முதல்வரின் குறிக்கோள் அவர்களைப் பார்த்து அமைச்சர்களாகிய நாங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
பொதுவாக மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கும் முதல்வராக நம்முடைய முதல்வர் அவர்கள் இருந்து வருகிறார்கள். அதுதான் நல்ல அரசுக்கு கிடைக்கும் சான்றாகும்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த நிர்வாகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழிநடத்தி செல்வது மட்டுமின்றி எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் எண்ணற்ற பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு கட்டணம்மில்லா பேருந்து சலுகை திட்டம் தற்பொழுது கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்குதல், நான் முதல்வன் திட்டம் மூலம் ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தங்களின் திறமைக்கேற்ப உயர்கல்வியை பெற்று சிறந்த சாதனையாளர்களாக வருவதன் மூலம் தொழில்வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்தல் போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
கிராமம் வளர்ந்தால்தான் நாட்டின் வளர்ச்சி உயர்வு பெறும். அதற்கேற்ப அரசின் திட்டங்கள் கடைகோடி பகுதி வரை சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
முதுகுளத்தூர் பகுதியை பொருத்தவரை பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தனி பைப்லைன் அமைத்து வழங்க அந்த துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல் இப்பகுதியில் அனைத்து கால்வாய்களும் தூர்வாரி வேளாண் பணிக்கு தேவையான தண்ணீர் கிடைத்திட மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மானாமதுரையில் இருந்து கமுதி வரையிலும் அபிராமத்தில் இருந்து கமுதி வரையிலும் புறவழிச்சாலை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதுகுளத்தூர் பகுதியை பொருத்தவரை அனைத்து சமுதாயத்தினரும் வசித்து வருகிறார்கள் ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் தேவையான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றி தரப்படும்.
பொதுவாக மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, போதிய மின்சார வசதி, போதிய பேருந்து வசதி, போதிய பள்ளிகள் அமைத்துக் கொடுத்தல், போதிய மருத்துவ வசதிகளை உருவாக்குதல் இவை முழுமையாக செயல்படுத்தினால் மக்களின் அத்தியாவாசி தேவைகள் நிறைவேறிவிடும்.
அத்தகைய திட்டங்கள் முழுவதும் சிறப்பாக செயல்படும் வகையில் அரசுத்துறை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் இப்பகுதியில் வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனம் மூலம் மில் கட்டப்பட்டு வருகின்றன.
இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். எனவே தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மக்களும் தேவைக்கேற்ப அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று காலமாக இருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கவில்லை.
மீண்டும் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நமது மாவட்டத்தில் 6222 மாணவர்களும் 6323 மாணவிகளுக்கும் மொத்தம் ரூ.6,37,63,266 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் வகையில் இன்று இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 3198 மாணவ, மாணவிகளுக்கு தற்பொழுது விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படும்.
மாணவ, மாணவிகள் மேல்நிலை கல்வி மட்டுமின்றி கல்லூரி வரை சென்று உயர்கல்வி படித்து தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதுமைப்பெண் திட்டம் தந்துள்ளார்கள்.

இத்திட்டத்தை மாணவிகள் பெற்று பயன்பெற வேண்டும் என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜாகண்ணப்பன் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர் மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜாகண்ணப்பன் அவர்கள் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் நாடளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அ.பாலுமுத்து அவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் திரு.வி.வேலுச்சாமி அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் (பொ), பரமக்குடி திருமதி.கு.சாந்தி அவர்கள்,
ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தலைவர் முதுகுளத்தூர் திருமதி.ஜெ.கண்ணகி ஜெகதீசன் அவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், செல்வநாயகபுரம் திரு.கே.முருகன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர், செல்வநாயகபுரம் திரு.ஏ.பாலுசாமி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
