முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு மருத்துவ அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர்,
முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலம், கிராமப்புற டாக்டர்கள் சிறப்பு டாக்டர்களாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க மாநில செயலாளர் டாக்டர் அகிலன் செய்தியாளர்களிடம் பேசிய போது
முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புற டாக்டர்களுக்கு இருந்து வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு நிறுத்தியது. இதை எதிர்த்து 2018-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது. இதை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது தமிழக அரசாணை செல்லும்.
இந்த நிலையில் அரசு சாரா டாக்டர்கள் சங்கம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதில் அரசுடன், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கமும் இணைந்து வாதாடியது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய மதுரை ஐகோர்ட்டு, தமிழக அரசின் அரசாணைசெல்லும் என தீர்ப்பளித்தது. அதன்படி முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி முன்னுரிமை மற்றும் ஊக்க மதிப்பெண் வழங்கியது செல்லும். அதன்படி கலந்தாய்வு நடத்தலாம் என அறிவித்துள்ளது.
ஐகோர்ட்டில் இந்த தீர்ப்பை தமிழக மருத்துவ அலுவலர்கள் சங்கம் வரவேற்கிறது.
இதன் மூலம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மேற்படிப்புக்கு சென்று தாலுகா, மாவட்ட ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சிறப்பு டாக்டர்களாக பணிபுரியு் வாய்ப்பு கிடைப்பதால் மக்களுக்கும் சிறந்த மருத்துவ வசதி கிடைக்கும் என கூறினார்.
பேட்டி :- திரு.டாக்டர் .அகிலன்,தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க மாநில செயலாளர் .