முன்பகை காரணமாக பழிக்கு பலி போலீஸ் ஸ்டேஷனில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டு விட்டு வந்த மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் கடந்த மாதம் டாஸ்மார்க் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்டனர்.
கடந்த மாதம் 14 ம் தேதி இரு தரப்பினரும் மோதி கொண்டதில் எலப்பார்பட்டியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் தலையில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் எரியோடு மீனாட்சிபுரத்தை சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எட்டு பேரும் ஜாமீனில் வெளிய வந்து கண்டிஷன் பெயில் காரணமாக நாள்தோறும் எரியோடு காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு கையெழுத்திட்டு வந்தனர்.
இன்று கையெழுத்து போட்டு விட்டு இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்தவர்களை திடீரென வழிமறித்த மர்மகும்பல் முன்னாள் சென்ற வாகனங்களை விட்டுவிட்டு கடைசியாக வந்த வாகனங்களை தள்ளிவிட்டு சரமாரியாக அருவாள் மற்றும் கத்தியால் வெட்டி உள்ளனர்.
இதில் கையெழுத்து போட்டு விட்டு வந்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மீனாட்சிபுரம் பொதுமக்கள் எரியோடு கடைவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் எரியோடு வேடசந்தூர் வடமதுரை குஜிலியம்பாறை கூம்பூர் போலீஸ் நிலைய போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ்சாரும் வந்து இறங்கினர். பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்கிறோம் என உறுதி அளித்ததன் அடிப்படையில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பழிக்கு பலியாக மூன்று பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் எரியோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.