முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. ஆய்வுக்கு பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி.
தேனி மாவட்டம்: கண்காணிப்பு குழு தலைவர் விஜய் சரண், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தன. முதன் முதலாக முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு குழுவினருடன் ஆய்வு செய்துள்ளேன்.
மேலும் முல்லை பெரியாறு அணை தற்போது பாதுகாப்பாக உள்ளது. அணையின் அனைத்து பிரச்சனைகள் குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முல்லைப்பெரியாறு அணைக்கு செல்லும் வல்லக்கடவு பாதை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
மேலும் பேபி அணையை பலப்படுத்துவது உள்ளிட்ட அணை தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும தீர்வு காண கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
CATEGORIES தேனி
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்முக்கிய செய்திகள்முல்லைப் பெரியாறு அணைமுல்லைப் பெரியாறு அணை ஆய்வுப் பணிகள்