BREAKING NEWS

மு.க ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம்.

மு.க ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம்.

மயிலாடுதுறை,

சென்னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வாழ்வாதார மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

 

இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கையான அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகை வழங்க வேண்டும்.

 

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது. 

 

இந்த மாநாட்டை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த அவசர கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் சென்னையில் நடைபெறும் மாநாட்டிற்கு ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )