BREAKING NEWS

மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

காவிரி டெல்டா மாவட்டங்கள் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 28ம் தேதி மூடப்படுவது வழக்கம்.

 

அதன்படி 28 ம் தேதி டெல்டா மாவட்டங்கள் சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு மேட்டூர் அணை மூடப்பட்டது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டம் வெள்ளாம் பெரம்பூர், குழி மாத்தூர், அள்ளூர், தென் பெரம்பூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பின் பட்ட சம்பா மற்றும் தாளடி நடவு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

நடவு செய்து கதிர் வரும் நிலையில் உள்ள 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட உள்ளதால் மூடப்பட்ட மேட்டூர் அணையை மீண்டும் திறந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

தண்ணீர் திறக்கப்பட்டால் மகசூல் இழப்பு தவிர்க்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS