மூன்றாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் காவலர்கள் உடற் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறை காவலர் , கிரேட் 2 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அவ்வகையில் கடந்த திங்கள் கிழமை காவலருக்கான தேர்வு பணிகள் துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தேர்வு பணிகள் நடைபெறுகிறது.
திங்கட்கிழமை காலை முதல் கட்டமாக 420 தேர்வர்களும் , செவ்வாய்க்கிழமை 367 தேர்வுகளும் அழைக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு , எடை , உயரம் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவையில் தேர்வர்கள் பங்கு பெற்றனர்.
இரண்டாவது கட்டமாக 9,10 தேதிகளில் கயிறு ஏறுதல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 400 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .
அவ்வகையில் இன்று காலை 7:00 மணி முதல் கயிறு ஏறுதல் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் , 400மீட்ர் மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் உள்ளிட்ட உடற் தகுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
நாளையும் இதே போல் உடல் தகுதி தேர்வுகள் நடைபெறும் எனவும் அதற்காக 367 தேர்வர்கள் அதில் பங்கு பெற உள்ளதாகவும் தேர்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் தேர்வு பணியை ஒட்டி அப்பகுதி முழுதும் காவல்துறை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் என தேர்வர்கள் கருதினால் அங்குள்ள அதிகாரியிடம் முறையிட்டால் மீண்டும் டிஜிட்டல் கணக்கிட்டு வருகிறது.
தேர்வு பணிகளுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடற்பகுதி தேர்வுகளுக்கென பள்ளிக் கல்வித் துறை சார்பில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அவசர மருத்துவ தேவைக்கு 108 ஊழியர்கள் என அனைவரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
தேர்வர்களுக்கு உணவுப் பொருட்களும் அங்கு காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.