BREAKING NEWS

மூன்று தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளி வீரர்.

மூன்று தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளி வீரர்.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வீல் சேர் ரேசர் மனோஜ் குமார் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் .

தங்கப்பதக்கம் :-

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தமணம்பட்டியை சேர்ந்தவர் 31 வயது ஆகும் மனோஜ்குமார். சர்வதேச சக்கர நாற்காலி ஓட்டத்தில் (வீல் சேர் ரேஸ்) தொடர்ந்து சாதித்து வரும் மாற்றுத்திறனாளியான மனோஜ் குமார் தொடர்ந்து பல்வேறு கட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை பெற்று வருகிறார் . கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பயிற்சி மேற்கொண்டு பல்வேறு விதமான போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்றுள்ளார்.

 

தற்போது இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள பல்வாடி விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு போட்டியில் சக்கர நாற்காலி ஓட்டம் பிரிவில் பங்கு பெற்று மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார் .

தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற இவர் 100 மீட்டர் 400 மீட்டர் 800 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியில் பங்கு பெற்று முதல் இடத்தை பிடித்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

 

 

புனேயில் நடைபெற்ற போட்டியில் வென்று தனது சொந்த ஊரான தம்மனம்பட்டிக்கு திரும்பிய மாற்றுத்திறனாளியான மனோஜ் குமாருக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்பு அளித்தனர் .

 

கூடலூர் அரசு கள்ளர் பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர் மனோஜ் குமாருக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து வரும் மாற்றுத்திறனாளி வீரர் மனோஜ் குமாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS