மெத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு.

திருவாருர் மாவட்டம் பரவக் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொற்பாவை. கோபிநாதன். தம்பதியினர் காவல்துறை க்யூ பிரிவில் டிஎஸ்பி யாக பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் கொடுத்த மோசடி புகார் அடிப்படையில் ஓய்வுப்பெற்ற டிஎஸ்பி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் தஞ்சை மருத்துவக் கல்லூரிபண்டிதர் தோட்டம் கே.எம்.எஸ் நகரில் வசித்து வரும் ராஜேந்திரன். தேன்மொழி தம்பதியினரும். பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பொறபாவை, கோபிநாதன் தம்பதியினரும் உறவினர்கள் ஆவார்கள். ராஜேந்திரன் காவல்துறை க்யூ பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.பணி ஓய்வுக்கு பின்னர் சாரா இன்டஸ்ட்ரிஸ் என்ற பெயரில் மெத்தை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்தார்.
இவர் உறவினரான பொற்பாவை, கோபிநாதன் தம்பதியினரை அணுகி மெத்தை தொழிலில் முதலீடு செய்தால் 7 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி சாரா இன்டஸ்ட்ரிஸ் டிரேடர்ஸ்க்கான அக்ரிமென்ட் தயாரித்து அதனை பொற்பாவை கோபிநாதன் தம்பதியிடம் ராஜேந்திரன் கொடுத்தார்.
இதனை நம்பி பொற்பாவை 40 லட்சம் ரூபாய் வங்கி வாயிலாக ராஜேந்திரன் வங்கி கனக்குக்கு அனுப்பி உள்ளார். பணம் பெற்ற ராஜேந்திரன் முறையாக பொற்பாவைக்கு பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பணம் கேட்டு சென்ற பொற்பாவை, கோபிநாதன் தம்பதியினரை மிரட்டி அனுப்பி உள்ளார்.
இதுக்குறித்து கடந்த பல முறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் ஒய்வுப் பெற்ற டிஎஸ்பி மீது புகார் என்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளனர். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி.ஆஷிஸ் ராவத்திடம் முதலீடு என்ற பெயரில் பணத்தை பெற்று ஏமாற்றிவரும் ராஜேந்திரன் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு புகார் அளித்ததன்பேரில் ஓயவுப்பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு செயயப்பட்டுள்ளது.