மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா.
ஏராளமான பக்தர்கள் தீக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ந்தேதி காலையில் கனபதி ஹோமமும், சக்தி பூஜையுடன் திருவிழா தொடங்கியது.
தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தீமிதிக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
பாபநாசம் செய்தியாளர் எஸ்.மனோகரன்
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தீமிதி திருவிழாபாபநாசம் தாலுக்காமுக்கிய செய்திகள்மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலயம்