மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே பாபநாசம் பிரிவு வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா விவசாயிகள் எதிர் பார்ப்பு.

தஞ்சாவூர் மாவட்டம்,; வங்காரம்பேட்டை அருகே பாபநாசம் பிரிவு வாய்க்காலில் பல ஆண்டுகளாக தூர்வாராததால் வாய்க்காலில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் நடப்பு ஆண்டுர மேட்டூர் அணைப்பதற்கு முன்பு பாபநாசம் பிரிவு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விவசாய தேவைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராஜகிரி அருகே குடமுருட்டி ஆற்றின் மூலம் தண்ணீர் வசதிபெறக்கூடிய பாபநாசம் பிரிவு வாய்க்கால் வன்னியர்தெரு, வங்காரம்பேட்டை மேலசெங்குந்தர்தெரு. கீழ செங்குந்தர்தெரு ஆகிய தெருக்களுக்கு மழைகாலங்களில் முக்கிய வடிகால் வாய்க்கால் ஆகவும், கஞ்சிமேடு, பாபநாசம் பகுதிக்கு முக்கிய பாசன வாய்க்கால் ஆகவும் இருந்து வந்த நிலையில்,
கடந்த சில ஆண்டுகளாக வாய்க்கால் தூர்வாராததாலும், வாய்க்காலில் சரிவர தண்ணீர் திறந்து விடாததாலும் வாய்க்காலின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது அதனால் பாசனவசதி பெறக்கூடிய நூற்றுக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சரிவர பாசனவசதி பெறமுடியாமல் பலவருடங்களாக பாதிக்கப்பட்டு வருகிறது பம்பு செட் மற்றும் மின்மோட்டாரை நம்பி இப்பகுதியில் விவசாயம் செய்யவேண்டிய நிலை உள்ளது.
இதேநிலை நீடித்தால் விவசாயம் முழுமையாக பாதிக்கும் பாபநாசம் பிரிவு வாய்க்கால் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும்நிலை உருவாகும் எனவே அரசு நடப்பு ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக பாபநாசம் பிரிவு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலின் முழு தூரத்தையும் தூர்வாரி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம் பிரிவு வாய்க்கால் குறித்து விவசாயிகள் கூறியதாவது
பாபநாசம் பிரிவு வாய்க்கால் மூலம் ஒருபோக விளைச்சலுக்கே வாய்க்காலில் இப்போ தண்ணீர் வருவதில்லை வாய்க்கால் தூர்வாரி பல வருஷமாச்சு அதனால் வாய்க்காலின் பெரும்பகுதியினை நாளுக்குநாள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
அரசு விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து பாபநாசம் பிரிவு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை முழுமையாக தூர்வாரி தண்ணீர் திறந்துவிட வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.