மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது

மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலையில் குறுக்கே தனிநபருக்கு சொந்தமான விவசாய கிணறு மூடப்படுவதால் அப்பகுதி விவசாயிகளும் கிணற்றின் உரிமையாளரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை பணியானது நடைபெற்று வருகிறது இதற்கிடையே விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பணம் செலுத்தப்பட்டு பிறகு சாலை பணியானது நடைபெற்று வருகிறது அப்பகுதியில் உள்ள விவசாய ராஜா என்பவரது கிணற்றின் பாதி அளவு சாலைக்காக கையகப்படுத்துவதால் விவசாய நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகும் அதற்கு மாற்று நிலம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் எங்கள் விவசாய கிணற்று ஏதும் செய்ய வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் நகர காவல் துறையினர் மற்றும் அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் அரக்கோணம் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கிணறு பாதிக்காமல் மாற்றுப் பாதை அமைக்க அமைக்கப்படும் என கூறியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.