மொபட் மீது பைக் மோதி சிறுமி பலி.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சின்னநாகலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகள் சாந்தி(17).இவரது தாய் சித்ரா(40). இவர்கள் இருவரும் மொபட்டில் நேற்று மாலை பெரியநாகலூர் மேட்டு தெரு -கல்லங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாந்தி மொபட்டை மேட்டு தெரு வளைவில் திரும்பும் போது எதிரே தத்தனூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர்(26).என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த சித்ரா,ராஜசேகர் ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.