மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம், கருவேலநாயக்கன்பட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கருவேலநாயக்கன்பட்டியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் தேனி மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளரும் மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினருமான பாஸ்கரன் விவசாய அணி மாநில செயலாளர் ஜி பி ராஜா விவசாய அணி மாவட்ட தலைவர் தென்றல் சரவணன் மற்றும் பாஜகவை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
