BREAKING NEWS

மோடியின் 75வது பிறந்தநாள் விழா: குடியாத்தத்தில் கோலாகல கொண்டாட்டம்!

மோடியின் 75வது பிறந்தநாள் விழா: குடியாத்தத்தில் கோலாகல கொண்டாட்டம்!

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ. சி. சண்முகம் நல்வாழ்த்துக்களு டன் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர புதிய நீதி கட்சி சார்பாக கொண்டாடப்பட்டது.

பாரதப் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா குடியாத்தம் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ்.ரமேஷ் தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மண்டல செயலாளர் பி.சரவணன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர் எம். கே.ஜெகன், மாவட்டச் செயலாளர்கள் சாய்.எஸ்.ஆனந்தன், ஸ்ரீகாந்த், சுசில்குமார்,

புதிய நிதி கட்சியின் பொறுப்பாளர்கள் சசிகுமார், வெங்கடேசன், கன்னியப்பன், செந்தில்குமார், செல்வம், சுந்தர்ராஜன், மோகன், திருநாவுக்கரசு, கார்த்திகேயன், சி.வெங்கடேசன், ராமு, ஹேமலதா மற்றும் பாஜக நிர்வாகிகள் பிரபாகரன், கணேசன், பாலாஜி, இளங்கோ, ராஜா, மணிகண்டன் மற்றும்

புதிய நீதி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். வாழ்த்துக்கள் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Share this…

CATEGORIES
TAGS