BREAKING NEWS

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவது உள்ளிட்டவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . சீனிவாசன் கழக அமைப்பு செயலாளர் முன்னிலை வகித்தார். அப்போது மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றை கண்டித்து பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

 

ஆர்ப்பாட்டங்களில் அம்பை நகர செயலாளர் அறிவழகன், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவண்பாபு, தலைமை கழக பேச்சாளர் மின்னல் மீனாட்சி, வார்டு கவுன்சிலர்கள் மாரிமுத்து, சிவக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம், விகேபுரம் நகர செயலாளர் கண்ணன், எம் ஜி ஆர் மன்ற தலைவர் முத்தையா, மற்றும் பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )