BREAKING NEWS

ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.

ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.

கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி,  மக்களுக்கு அறிவுறுத்தல்.

 

தற்பொழுது இந்தியா முழுவதிலும் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது எனவே மக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிப்பு அடையாமல் தங்களை பாதுகாத்து கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதில் முதலாவது பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். இரண்டாவது தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
மூன்றாவது அவ்வப்போது கைகளை சுத்தமாக சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் நான்காவது காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடம்பு வலி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை பெற்று கொரோனா பரிசோதனை செய்து, தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 

ஐந்தாவது கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குணமடையும் வரை தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என இந்த அறிவுரைகளை ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள் பின்பற்றி கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து நலமுடன் வாழ ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கேட்டுக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS